செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 65) இவர் கடப்பாக்கத்தில் சிவா கிளினிக் மற்றும் வீட்டில் நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து வந்துள்ளார். அவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு கிளினிக் நடத்தியதாக தெரிகிறது. இதுகுறித்து கடப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் வளத்தையன், சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் போலி டாக்டர் சிவாவை கைது செய்து செய்யூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி மதுராந்தகம் கிளை சிறையில் அடைத்தார்.
செங்கல்பட்டு அருகே போலி டாக்டர் கைது
