• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தென்காசி மாவட்டம் குருவிகுளத்தில் சமுதாய வளைகாப்பு விழா

ByA.Tamilselvan

Oct 16, 2022

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா குருவிகுளத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு விழாவிற்கு குருவிகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நர்மதா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர்கள் சொர்ணமாரியம்மாள், லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜா, குருவிகுளம் யூனியன் சேர்மன் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினர். இவ்விழாவில் 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள், குங்குமம், சேலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கப்பட்டது.
பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான சாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் கடற்கரை, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமார் சங்கர், முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் சுதாபிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் மணிமாலா, கணேசன், இலக்கிய அணி கண்ணன், களப்பாளங் குளம் பஞ்சாயத்து தலைவர் ஜெய்சங்கர், மாணவரணி செந்தில்நாதன், சாயமலை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ராஜகுலராமர்பாண்டியன், குருவிகுளம் கிளை செயலாளர் செந்தில் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட பல பலர் கலந்து கொண்டனர்.