• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்..,

ByPrabhu Sekar

Feb 14, 2026

மேற்கு தாம்பரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகர மத்திய பகுதி கழகத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் மறைந்த புரட்சித் தலைவர் அம்மாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு தாம்பரத்தில் மாபெரும் இலவச மருத்துவ நடைபெற்றது.

60வது வார்டு வடக்கு வட்ட கழகத்தின் ஏற்பாட்டில், கழக மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் பாலாஜி ஸ்ரீகாந்த் தலைமையில் இந்த முகாம் நாளை, பிப்ரவரி 14, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. மேற்குத் தாம்பரம் திருவள்ளுவர்புரம் பிரதான சாலையில் இந்த முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச. இராசேந்திரன் தொடங்கி வைத்தார். மேலும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, தாம்பரம் மாநகர மத்திய பகுதி கழக செயலாளர் எல்லார்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முகாமில் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இந்த முகாமில் மாவட்ட, பகுதி மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்தனர்.

இந்த ஏற்பாடுகளை 60வது வார்டு வடக்கு வட்ட கழக செயலாளர் பல்லவன் பி. நாராயணசாமி மேற்கொண்டுள்ளார்.