தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் ரோடு மதனபுரம் முடிச்சூர்-4 அஞ்சல் குறியீடு 600048 நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது.

இங்கு முறையாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய விலையில்லா பொருட்களை முறைகேடாக விற்று வருகின்றனர்.
ஒரு கிலோ கோதுமையை 15 ரூபாய் வீதம் முறைகேடாக விற்று வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் வருத்தம் அடைகின்றனர்.