• Tue. Dec 10th, 2024

நீதி கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர்..!

Byகுமார்

Sep 22, 2021

நீதி கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட இளைஞர்..!

நாகர்கோவில் ஆட்சியர் இணைப்பு கட்டிடம் முன்பு நியாயவிலை கடை காலிப்பணியிடத்தற்கு தேர்வு எழுதியும் லஞ்சம் கொடுக்க வசதி இல்லாத காரணத்தால் அந்த காலிப்பணியிடம் வேறு நபருக்கு சென்றதாக கூறி நியாயம் கேட்டு தர்ணாவில் ஈடுபட்ட இளைஞரால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கண்ணங்குழி, பூட்டேற்றி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நியாயவிலை விற்பனையாளர் பணிக்கு தேர்வு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எழுதி காத்திருந்த நிலையில் நியாயவிலை கடை விற்பனையாளர் காலிப்பணியிடதிற்கு பணம் கொடுத்து பலர் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து தான் ஏழை என்றதால் புறக்கணிப்பட்டுள்ளதாகவும், நியாயவிலை விற்பனையாளர் பணிக்கு ரூ5,00,000 கொடுத்து பலர் வேலையில் சேர்ந்துள்ளனர்.

ஆனால், அதிகாரிகள் தனக்கு வேலை தருவதாக கூறி ரூ.5,00,000 கொடுத்த நபர்களுக்கு வேலை போட்டு கொடுத்துள்ளனர். பணம் கொடுக்க முடியாத காரணத்தால் தன்னை புறக்கணித்து விட்டதாக வேதனை தெரிவித்து நீதி கேட்டு ஆட்சியர் அலுவலக இணைப்பு கட்டிடம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்டாதல் பரபரப்பு.

விசுவல். நாகர்கோவில் ஆட்சியர் இணைப்பு கட்டிடம் முன்பு தர்ணாவில் ஈடுப்பட்ட இளைஞர்.