• Mon. Dec 9th, 2024

தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி ஆர்ப்பாட்டம்

Byகுமார்

Sep 22, 2021

தமிழ்நாடு உள்ளாட்சித்துறை பணியாளர் சம்மேளனம் இன்று தேனி மாவட்டம் அல்லி நகர் நகராட்சி முன்பு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றகோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு மாவட்ட செய்யலாளர் K.பிச்சைமுத்து மற்றும் மாவட்டத் தலைவர் M. கர்ணன் தலைமை தாங்கினார். துவக்கவுரையை AITUC மாவட்ட பொதுச் செயலாளரும், வாழ்த்துரையை AITUC மாநில துணை தலைவரும் வழங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அல்லி நகராட்சியில் ஆட்குறைப்பு செய்யப்பட்ட 100 தூய்மை பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் எனவும், தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதிய உயர்வின்படி நாளொன்றுக்கு 424 ரூபாய் வழங்கப்படவேண்டும், தவறு செய்யும் மேஸ்திரிகள் மீது கோத்தடிமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ஜாதிபாகுபாடின்றி பணியாளர்களுக்கு பணிக்கு அனுப்பவேண்டும். கொரோனா காலத்தில் பணி புரிந்தவர்களுக்கு ரூ.15,000 உடனடியாக வழங்கப்படவேண்டும் பல்வேறு கோிக்கைகளை முன்னெடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.