• Sat. Apr 20th, 2024

நீட்டிக்கப்படும் கொரோனா விதிகள்!

ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் காரணத்தாலும்,தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா விதிகள் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையிலும், கொரோனா கட்டுப்பாடு விதிகளை ஜனவரி 31 வரை நீடித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது!

இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா மாநில தலைமை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கொடுத்ததில், இந்தியாவில் ஜனவரி 31-ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும். ஓமைக்ரான் பரவலை பொறுத்து தேவைப்படும் பட்சத்தில் மாநில, மாவட்ட அளவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கலாம். ஓமைக்ரான் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்!

மேலும், பண்டிகை கால கூட்டங்ளை கட்டுப்படுத்த, கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மாநிலங்கள் பரிசீலிக்கலாம் என்றும் தொற்று பரவலை பொறுத்து மாவட்டம் அல்லது மாநில அளவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் எனவும், அந்தக் கடிதத்தில், குறிப்பிட்டுள்ளார்! கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *