• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

இதனால் தான் 3 நிமிடத்தில் வெளியேறினார் ஆளுநர் ரவி… விளக்கமளித்த ராஜ்பவன்!

ByP.Kavitha Kumar

Jan 6, 2025

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் வெளியேறினார் என ராஜ்பவன் விளக்கமளித்த பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டு.மீண்டும் சில திருத்தங்களுடன் வெளியிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தாண்டில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று காலை 9:30 மணிக்கு, சட்டப்பேரவை கூட்ட அரங்கில் தொடங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேண்ட் வாத்திய முழக்கத்துடன் வரவவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் பேரவை தலைவர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ரவி புறப்பட்டுச் சென்றதால் சபையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு விளக்கம் அளித்து, ஆளுநர் மாளிகை (ராஜ்பவன்) தரப்பில், 9.43 மணிக்கு எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிடப்பட்டது. அதில், அரசியல் சட்டமும், தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன. தேசிய கீதத்தை மதித்தல் என்பது நமது அரசியலமைப்பு சட்டத்தில் கூறியுள்ள முதல் கடமை. ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்பட்டது.

தேசிய கீதத்தை பாடுவதற்கு முதல்வர் ஸ்டாலின், பேரவை தலைவரை ஆளுநர் ரவி வலியுறுத்தினார். ஆனால் தேசிய கீதம் பாட மறுப்பு தெரிவிக்கப்பட்து. அரசியலமைப்பு சட்டம், தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததால் ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தேசிய கீதம் பாடம் மறுக்கப்பட்டது கவலைக்குரிய விஷயமாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சில நிமிடங்களில் அந்த பதிவை ஆளுநர் மாளிகை நீக்கியது. அதன்பிறகு, மீண்டும் சில திருத்தங்களுடன் அந்தப் பதிவு மீண்டும் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டை போல, இந்த ஆண்டும் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியில் வெளியேறிய சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.