• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள்… சட்டப்பேரவையில் பரபரப்பு!

ByP.Kavitha Kumar

Jan 6, 2025

தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் என அனைவரும் சட்டப்பேரவை வளாகத்தில் கூடினர். அப்போது, சட்டப்பேரவைக்குள் வந்த அதிமுக எம்எல்ஏக்கள் ‘யார் அந்த சார்’? என்ற பேஜ்ட் அணிந்து கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கோஷம் எழுப்பியனர். இதனால் சட்டப்பேரவையில் அமளி ஏப்ட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.