அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது.
ஆரம்பம் முதலே கொல்கத்தா அணி அணி சிறப்பான ஆட்டத்தை கொடுக்க தவறினர். முதல் ஓவரில் பத்து ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார் கில்.
தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரும் 18 ரன்களில் வெளியேறினார். ராகுல் திரிபாதி 33 பந்துகளில் 45 ரன்களை சேர்த்து ஆறுதல் கொடுத்தார். அந்த அணியின் கேப்டன் மோர்கன் 8 ரன்களில் அவுட்டானார்.
நித்திஷ் ராணா மற்றும் ரசல் 36 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராணா 37 ரன்களைக் குவித்தார். மறுபக்கம் தினேஷ் கார்த்திக் அதிரடியாக தனது ரன் கணக்கை துவக்கினார். 11 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார் அவர்.
சென்னை அணிக்காக இந்த ஆட்டத்தில் தாக்கூர், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்யும் வீழ்த்தினர்கள்.
சென்னை அணி 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது.
சென்னை அணியில் ருதுராஜ் – டூப்ளசிஸ் முதல் விக்கெட்டிற்கு 74 ரன்கள் சேர்த்தனர். ருதுராஜ் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். 12-வது ஓவரில் சென்னை 102 ரன்கள் எடுத்த நிலையில் டூப்ளசிஸ் வெளியேறினார். அவர் 30 பந்துகளில் 43 ரன்களை சேர்த்து வெளியேறினார்.
தொடர்ந்து ராயுடு, மொயின் அலி, ரெய்னா, தோனி என விக்கெட்டுகளை சென்னை அணி இழந்தது. கடைசி மூன்று ஓவர்களில் 31 ரன்கள் சென்னை அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது.
19-வது ஓவரில் சென்னை 22 ரன்களை எடுத்தது, ஜடேஜா இரண்டு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகளை அந்த ஓவரில் விளாசி இருந்தார்.
கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சென்னை அணியின் வெற்றிக்கு தேவைப்பட்டது. இறுதியில் தீபக் சஹார் வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை எடுத்தார். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்தது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை இரண்டாவது பாதி ஆட்டத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு அமீரகத்தில் சென்னை தொடர்ச்சியாக பெற்றுள்ள ஆறாவது வெற்றி இது.