• Thu. Apr 25th, 2024

*மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும் – லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி *

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க மகாசபை கூட்டத்திற்கு வருகை தந்ந மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி வருகை தந்தார் பின்னர் செய்தியாரகளுக்கு அளித்த பேட்டியில்,

தினமும் உயர்ந்து வரும் டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கச்சா எண்ணை விலை உயர்வுக்கு தகுந்தார்போல் விலை ஏறினால் பரவாயில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் கச்சா எண்ணை விலை உயர்வுடன் மத்திய மாநில அரசுகள் கூடுதலாக வரிவிதித்து எங்களை நஷ்டத்திற்குள்ளாக்குகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
ஒளிரும் பட்டை 11 நிறுவனங்களிடம் வாங்கிக்கொள்ளலாம் என்ற மத்திய அரசு கடந்த மாதம் 6ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை இதுவரை மாநில அரசு அமல்படுத்தவில்லை. இதனை விரைவில் அமல்படுத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம்.

மத்திய அரசு டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்த உள்ளோம்.
மத்திய அமைப்பும், எங்களுக்கு சிம்டாவும் அறிவுரை கூறும் பட்சத்தில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பை தருவோம்.
ஏற்கனவே அறிவித்த ஏற்றுகூலி, இறக்கு கூலி தரமுடியாது என்ற அறிவிப்பை வியாபாரிகளிடம் விளக்க 9ம்தேதி நடைபெறும் வியாபாரிகள் சங்கத்தின் விழுப்புரம் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளோம்.

டீசல் விலை உயர்வால் லாரி தொழிலை நடத்தமுடியாத நிலை உள்ளது. மத்திய அரசு சிறு முதலாளிகளை ஒழித்துவிட்டு கார்பரேட்டுகளுக்கு வழிவகுக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்.
அப்படி கார்பரேட்டுகள் வந்தால் அவர்கள் விருப்பப்படிதான் வாடகை நிர்னயம் செய்வதும், அவர்கள் விருப்பப்படி அரசு நடக்கும். எங்களை போன்ற சிறு முதலாளிகள்தான் இந்த தொழில் சரியாக நடக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *