• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் சோதனை…

Byகாயத்ரி

Jul 20, 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். தங்கமணிக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை சரி பார்த்து வருகின்றன. திருச்செங்கோட்டில் உள்ள தங்கமணி வீட்டில் வருவாய், பொதுத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சொத்து ஆவணங்களை சரிபார்த்தனர். இடத்தின் மதிப்பு, எவ்வளவு இடத்தில் வீடு கட்டப்பட்டுள்ளது, சொந்த இடங்கள் என அனைத்தையும் அவர்கள் சரி பார்த்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் தேதி வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இப்படி வரிசையாக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவதால் அதிமுகவினர் பதட்டத்தில் உள்ளனர்.