• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

*சென்னை தொழிலதிபர் வீட்டில் ரெய்டு – இளங்கோவனுக்கு எதிராக சிக்கிய ஆதாரங்கள்*

Byமதி

Oct 23, 2021

சேலத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி மாநில தலைவராகிய இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவின் குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பல சொத்துக்கள் சிக்கியுள்ளது.

இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் தொழிலதிபர் ராஜநாராயணன் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் ராஜநாராயணன் வீட்டிலிருந்து நிலம் வாங்கியது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின.

ஓராண்டுக்கு முன்பு சேலம் இளங்கோவனுக்கு ராஜநாராயணன் 450 ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்தது சோதனையில் அம்பலமாகியுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடத்திய விசாரணையில் இளங்கோவனை நேரில் பார்த்ததில்லை என ராஜநாராயணன் தகவல் அளித்துள்ளார். இளங்கோவனின் நண்பரான பரிபூரணம் மூலம் தான் 450 ஏக்கர் நிலத்தை வாங்கி கொடுத்ததாக ராஜநாராயணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.