• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு இசை நிகழ்ச்சி..,

ByS. SRIDHAR

Feb 6, 2026

புதுக்கோட்டை மச்சுவாடி சாரதா நகரில் உள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய விநாயகர் ஆலயயத்தில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு ஐஸ்வர்ய பக்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது

இதில் ஏராளமான இசை பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டை மாநகர பகுதியான மச்சுவாடி சாரதா நகரில் பிரசித்தி பெற்ற ஐஸ்வர்ய விநாயகர் ஆலயம் உள்ளது

இந்த ஆலயத்தில் இன்று சங்கடஹரசதுர்த்தி மற்றும் நான்காம் ஆண்டு வருடாபிஷேகத்தை முன்னிட்டு ருத்திர ஜபத்துடன் கூடிய சிறப்பு பால் இளநீர் பன்னீர் என 11-வகையான அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் உள்ள ஐஸ்வர்ய விநாயகருக்கு பஞ்சமுக தீபாதாரனை காண்பிக்கப்பட்டது

அதனை தொடர்ந்து மாலை ஸ்ருதிலயம் இசைபள்ளி ஆசிரியர் திருமதி லஷ்மி ஜெகதீஸ்வரன் தலமையில் மாணவர்கள் பங்கேற்கும் பக்தி இசை நிகழ்ச்சியில் ஏராளமான சிருவர்கள் கலந்து கொண்டு தங்களது இசை திறமையை வெளிபடுத்தினர்

இதில் ஆலய நிர்வாகிகள் சங்கரநாராயணன் மஞ்சுநாதன் சந்தானராமன் ரவீந்திரன் மகாலிங்கம் வைத்திலிங்கம் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்