• Fri. Apr 26th, 2024

திமுக ஆட்சியில் அனைத்துமே குளறுபடியாக உள்ளது- செல்லூர் கே.ராஜூ

ByA.Tamilselvan

May 12, 2022

திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் அனைத்துமே குளறுபடியாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது
மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மேற்கு தொகுதி சட்ட மன்ற அலுவலகத்தில் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் நேற்றைய தினம் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம் வேதனையளிக்கிறது. பத்திரிக்கையாளர்களே தாக்கும் அளவிற்கு திமுகதொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்தது என்றால் அது வேதனை அளிக்கிறது
தமிழகசட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி என்ற அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.மதுரை நிருபர் நவீன் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களால் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது.
மதுரைமாநகராட்சியில் அதிமுக மாமன்ற உறுப்பினர் களுக்கு முறையான அறைகள் மற்றும் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யவில்லை என பலமுறை நான் மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் மாநகராட்சியில் முறையான இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை
மதுரை மாநகராட்சி மேயர் பொதுவானவராக இருக்கவேண்டும்.செய்தி சேகரிப்பது தான் செய்தியாளர்களின் பணி,அவர்களை செய்தி சேகரிக்க விடாமல் தாக்குவது கண்டிக்க தக்கது. வரும் நாட்களில் இதே போன்ற சம்பவம் நடந்தால் அதிமுக சார்பாக தலைமைக்கழக உத்தரவின் பேரில் நிச்சயமாக மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்: தற்போது நடந்தது போன்ற சம்பவம் தான் தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் 3 பேர் உயிரிழந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
மாநகராட்சி பணிகளில் மேயரின் கணவர் தலையிடுவது கண்டிக்கதக்கது. மாறாது ஐயா மாறாது மனமும் குனமும் மாறாது என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தி மு க வின் குணம்மாறாது.
ம க்களுடைய நிலையை அறியாதவர் தான் நிதி அமைச்சர். நீட் தேர்வு குறித்து எங்க அப்பாவுக்கு சூட்சமம் தெரியும் என்று சொன்னார் உதயநிதி – தற்போது என்னாச்சு. கொடுத்த வாக்குறிதிகளை திமுக நிறைவேற்றவில்லை.மக்களூக்கு தேவைப்பட கூடிய அனைத்து விதமான கட்டிகளையும் கொண்டுவந்தது அதிமுகதான் மதுரை மக்களுக்கு பொழுது போக்குவதற்காக சிறந்த இடம் இல்லை என்று நான் சட்டமன்றத்தில் கேட்டேன். பணையூர் கால்வாய் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு நீர் நிறைந்த தெப்பக்குளத்தில் லேசர்சோ வேண்டும் என்று சொன்ன போது தங்கம் தென்னரசு குறுக்கிட்டு பேசியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. திமுக ஆட்சி அமைந்த நாள் முதல் அனைத்துமே குளறுபடியாக உள்ளது.ஸ்மார்ட் சிட்டி திட்டம் மதுரைக்கு அதிமுக காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட து.புதிய திட்டங்களை தற்போது இருக்கக்கூடிய மதுரை அமைச்சர்கள் செயல்படுத்தவில்லை என்றால் மதுரையில் இருக்கின்ற அதிமுக உடைய 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகிய நாங்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து நிச்சயம் புதிய திட்டங்களை மதுரை மக்களுக்கு விரைந்து செய்து கொடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார் பேட்டியின்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் கள்,அதிமுக நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *