• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

சிவகாசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Jul 22, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியை சேர்ந்த தெற்கு தெரு நாடார் மகாஜன சங்கம், சிவகாசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பன்னீர் தெப்பம் அருகில் நடைபெற்றது.

பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுகள் எழுதுபொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை சிவகாசி காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர் பைபாஸ் வைர குமார் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள் வேலுச்சாமி, அய்யனார், பாலமுருகன், உள்ளிட்டர் கலந்து கொண்டனர். அதே போல் சித்துராஜபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னதானத்தை வட்டாரத் தலைவர் பைபாஸ் வைரகுமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை சாமி, காளிமுத்து, உள்ளிட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.