• Mon. May 29th, 2023

ஒரே மாதத்தில் 2,000 கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்த ஈஷா!

ByKalamegam Viswanathan

Apr 26, 2023

ஈஷா யோகா மையம் சார்பில் ஒரே மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 73 சிறைகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
சிறைகளில் இருக்கும் கைதிகள் குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ்வதால் மன அழுத்தம், உடல் நலப் பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, இப்பிரச்சினைகளில் இருந்து அவர்கள் வெளி வர உதவும் விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் கற்றுக்கொடுத்து வருகிறது.
அதன்படி, நடப்பு ஏப்ரல் மாதத்தில் மட்டும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள மத்திய சிறைகள், பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட சிறைகள் மற்றும் கிளை சிறைகள் என மொத்தம் 73 சிறைகளில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்பட்டன.


சத்குருவால் பயிற்சி அளிக்கப்பட்ட யோகா ஆசிரியர்கள் சிறைக்கு நேரில் சென்று ‘உயிர் நோக்கம்’, ‘உப யோகா’, ‘சூரிய சக்தி’ போன்ற வெவ்வேறு விதமான யோகா பயிற்சிகளை கைதிகளுக்கு கற்றுக்கொடுத்தனர். இவ்வகுப்புகளில் ஆண் மற்றும் பெண் கைதிகள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இப்பயிற்சிகளை சிறை கைதிகள் தினமும் செய்து வருவதன் மூலம் மன அழுத்தப் பாதிப்பில் இருந்து விடுபட முடியும். மேலும், முதுகுத்தண்டு வலுப்பெறும், மூட்டு வலியில் இருந்து விடுதலை பெறலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *