ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனீஷ் மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
திமுக, நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகள் போட்டியிடுகின்றன. மொத்தம் 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி இருவரும் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரி மனீஷ் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கர்நாடகா மாநிலத்தவரின் வேட்புமனுவை ஏற்றதாக புகார் எழுந்த நிலையில் மனீஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.