• Sat. Sep 5th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பொதுக்குழு வழக்கின் தீர்ப்பிற்கு பின் முகத்தை காட்டாத இபிஎஸ்…

Byகாயத்ரி

Aug 18, 2022

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது.இதை தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஆனால் வழக்கு தீர்ப்புக்கு பின் இபிஎஸ் எந்த செய்தியாளர் சந்திப்பிலும் ஈடுபடவில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார். பூச்சிக்கடி காரணமாக இபிஎஸ் முகத்தில் தடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தீர்ப்புக்கு பின் அவர் செய்தியாளர்களை கூட சந்திக்கவில்லை. வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும், சட்டநடவடிக்கை மேற்கொள்வது குறித்து, சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.