சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதி கொண்ட அமர்வில் இன்று எடப்பாடி பழனிச்சாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்து, அந்த வழக்கு அவசர வழக்காக திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.