பிறந்த நாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் கொண்டாடுவார்கள். ஆனால், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் தனது பிறந்தநாளில் கேக் வெட்டியே சோர்ந்து போகும் அளவுக்கு 550 கேக்குகளை வெட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவுகிறது.

550 கேக்குகளை வெட்டுவது மட்டுமில்லாமல், இதை செய்ய அவர் மும்பையின் காந்திவலி மேற்கு ரயில் நிலையத்தைத் தேர்ந்தெடுத்தார். 550 கேக்குகளை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடுவது உண்மையிலேயே தனித்துவமான அனுபவமாக இருக்கும்.