• Sat. Apr 27th, 2024

21-வது நாளாக டி 23-புலியை தேடும் பணி – மயக்க ஊசி செலுத்தியும் புலி தப்பி ஓட்டம்!.

Byமதி

Oct 15, 2021

T23 ஆட்கொள்ளி புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. புலியை சுட்டும் பிடிக்கலாம் என வனத்துறை முடிவுசெய்தது. ஆனால், ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக புலியை மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டி-23 புலி என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த புலியை பிடிக்கும் பணியில் மோப்பநாய்களும், கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

இதற்காக வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மரங்களில் பரண் அமைத்து அதில் இருந்தவாறு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், மசினகுடி வனப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்ட வனத்துறையினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர்.

எனினும் புலி தப்பியோடியது. மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் புலி சோர்வாக காணப்படும் என்பதால் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊர்மக்கள் வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட வேண்டாம் எனவும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *