கோவில் ஒன்றில் பூசாரி ஒருவர் நாள்தோறும் நேரம் தவறாமல் பயபக்தியுடன் சாமிக்கு பூஜைகளும், பரிகாரங்களும் நடத்தி வந்தார்.
ஒரு நாள் அதிகாலை வழக்கம் போல் தனது பணிகளைத் தொடர்ந்த அவருக்கு ஓர் பெரிய அதிர்ச்சி.
சாமி சிலையில் அணிந்து இருந்த 5 சவரன் நகையைக் காணவில்லை…;
இதனால் மனவேதனையில் இருந்த பூசாரி, அடுத்த இரண்டு நாள்கள் சரியான முறையில் சாமிக்கு பூஜை செய்யவில்லை…;
பூசாரியின் மனவேதனையை நீக்க மூன்றாம் நாள் இரவு பூசாரியின் கனவில் தோன்றினார் கடவுள்..
பூஜை சரிவர செய்யாததைப் பற்றிக் கேட்ட கடவுளிடம் நகை காணாமல் போனதுப்பற்றியும், அதன் காரணமாக மனவேதனையில் உள்ளதாகவும் பூசாரி கூறினார்..,
ஓ இதுதான் காரணமா..
சரி கேள்…..
ஒருவனது வேண்டுதலை நிறைவேற்றியதற்கு கணிக்கையாக எனது சிலைக்கு அந்த நகை அணிவிக்கப்பட்டது..,
அதே போல மற்றொருவனின் வேண்டுதலை நிறைவேற்றினேன் என்று சாமி பதில் கூறியது. இதைக் கேட்ட பூசாரிக்கோ ஒன்றுமே புரியவில்லை.
உடனே, சாமி பூசாரியிடம், உனக்கு நான் சொல்வது புரியவில்லையா…அவனது தேவையை நிறைவேற்றிக்கொள்ள நான் தான் அந்த நகைகளை எடுத்துக்கொள்ள உத்தரவு வழங்கினேன் என்று கூறியது.
இந்தக் கதையின் நீதி, இருப்பவனிம் இருந்து வாங்கி இல்லாதவனிடம் கொடு என்கிற கருத்தைத்தான் தெளிவுபடுத்துகிறது.