

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் அதிகாலை முதல் அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ரெய்டை தொடர்ந்து தற்போது அமைச்சர் நேருவின் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திருச்சி தில்லை நகரில் உள்ள நேருவின் வீட்டில் ரெய்டை மேற்கொண்டிருக்கின்றனர்.
வங்கி மோசடி வழக்கு ஒன்றில் விசாரணையை அமலாக்கத்துறை தீவிரப்படுத்தியிருக்கிறது. இதில் இன்று காலை முதல் ரெய்டை மேற்கொண்டு வருகிறது. காலை முதல் நேருவின் சகோதர, சகோதரிகள் மற்றும் மகன் வீடுகளில் ரெய்டு மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது திருச்சியில் உள்ள நேருவின் வீட்டிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குடும்பத்தினர் அலுவலகங்களில் ரெய்டு நடந்து வந்தபோதிலும், சட்டப்பேரவைக்கு வருகை தந்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் தந்து வருகிறார் அமைச்சர் நேரு. வருமான வரித்துறையிலிருந்து வந்த தகவல்களை அடுத்து இந்த ரெய்டு நடத்தப்படுவதாகவும், அமலாக்கத்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.

