• Thu. Mar 28th, 2024

பழனி முருகன் கோயிலில் வேலைவாய்ப்பு..!

Byவிஷா

Mar 8, 2023

தமிழக அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, திண்டுக்கல் மாவட்டம் பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் உதவியாளர் மற்றும் இசை சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 281 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.04.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்களின் விவரம்:
தட்டச்சர் – 6
நூலகர் – 1
கூர்க்கா – 2
அலுவலக உதவியாளர் – 65
பல வேலை பணியாளர் – 26
உதவி சமையல் – 2
ஆயா – 3
பூஜை காவல் – 10
காவல் – 50
பாத்திரசுத்தி – 1
தொழில்நுட்ப பணியிடங்கள் – 92
ஆசிரியை – 18
ஆய்வக உதவியாளர் – 1
நாதஸ்வரம் – 3

தவில் – 2
தாளம் – 3
அர்ச்சகர் – 3
கல்வித் தகுதி: தொழில்நுட்ப பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களுக்கு அதற்குரிய தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

பிறப் பணியிடங்களுக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பாருங்கள்.

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: இணை ஆணையர்ஃ செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழநி, திண்டுக்கல் – 624601

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://palanimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *