• Sun. Jun 4th, 2023

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூச்சல், குழப்பம்… உடனடியாக முடிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டம்..

Byகாயத்ரி

Jun 23, 2022

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் உடனடியாக முடிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்த மோதல் நிலவி வரும் நிலையில், கடும் பரபரப்புகளுக்கு இடையே இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தவிர வேறு 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடியார் அணியினர், ஓபிஎஸ் அணியினர் ஒருவருக்கொருவர் கோஷங்களை எழுப்பி வந்ததால் பொதுக்குழுவை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சல், குழப்பங்கள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்றைய பொதுக்குழு கூட்டம் முடிவடைவதாக சபாநாயகர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.
மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி காலை 9 மணி அளவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொடர் கூச்சல் குழப்பம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மேடையிலிருந்து எழுந்து சென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *