• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

உதயமாகிறது விவசாய சங்கங்களின் புதிய அரசியல் கட்சி

Byகாயத்ரி

Dec 25, 2021

விவசாய சங்கங்கள் புதிய அரசியல் கட்சி துவங்க இன்று அறிவிப்பு வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 25 விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், சண்டிகரில் இன்று கூடி புதிய கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

‘சன்யுக்த்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை இவர்கள் தொடங்க உள்ளதாகவும், அந்த கட்சி நேரடியாக பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 8 விவசாய சங்கங்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் சம்யுக்த் கிஷான் மோட்சா என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் பல்வேறு அமைப்புகள், ஏராளமான பொதுமக்கள் விவசாயி சங்கங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி வருவதால் புதிய அரசியல் கட்சியை தொடங்குவதாக பஞ்சாப் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.