• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பதினோராம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் சின்னக்கடை தெரு பகுதியில் அமைந்துள்ள அல் சுமத் அறக்கட்டளை மற்றும் சின்னக்கடை சஹர் கமிட்டி சார்பாக கடந்த 10 ஆண்டுகளாக இத்தார் நோன்பு திறக்கும் நிகழ்வை நடத்தி வருகின்றனர்.
நேற்று மாலையில் பாசி பட்டறை பள்ளிவாசல் அருகில் உள்ள கீரைக்காரத்தெரு பகுதியில் இந்த அமைப்பின் சார்பில் பதினோராம் ஆண்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறந்து மகிழ்ச்சி அடைந்தனர். அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக டாக்டர் பாரூக், டாக்டர் நசார், தொழிலதிபர் அரபாத், தலைமை இமாம் அப்துல் காதர், சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் அப்சல் ஹயாத், செயலாளர் கதியதுல்லா, பொருளாளர் சதா தௌபிக் ஆகியோர்கள் செய்திருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இதுபோன்ற பொது நல பணியில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பு நிர்வாகிகளை அனைத்து பொது மக்களும் பாராட்டினார்கள்.