இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் சாலையோர கடைகளில் நடை பயணமாக வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-07-at-3.38.24-PM-1024x576.jpeg)
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை தொடர்ந்து இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபெருமாள் மற்றும் கட்சியினர் இன்று ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமப்புற பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஆணிமுத்து, ஒன்றிய செயலாளர்கள் திருமலை, ராஜா, கருப்பையா, நகர செயலாளர் குட்லக் ரஹ்மத்துல்லா, எஸ்டிபிஐ ஒன்றிய பொறுப்பாளர்கள், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், மகளிரணியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
![](https://arasiyaltoday.com/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-07-at-3.38.25-PM-1024x525.jpeg)