குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித்திரியும் ஒன்பது காட்டு யானைகள்…பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்கள், மலை ரயில் பாதையில் உலாவரும் காட்டு யானைகள் . இரவு நேரங்களில் வீட்டின் நுழைவு வாயில்களை உடைத்து உள்ளே நுழைந்து வாழை மரங்களை சாப்பிடும் சிசிடி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக மூன்று குட்டிகளுடன் ஒன்பது காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது. அவ்வாறு முகாமிட்டுள்ள காட்டு யானைகள் பகல் நேரங்களில் மலை ரயில் பாதையில் நடமாடுவதும், மாலை நேரங்களில் தேயிலைத் தோட்டங்கள் வழியாக சென்று குன்னூர் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தண்ணீர் குடிக்க செல்வதும், இரவு மக்கள் நடமாட்டம் இல்லாத பொழுது கிராமப் பகுதிக்குள் நுழைந்து வீடுகளின் நுழைவு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்து வாழை மரங்களை குட்டிகளுடன் சாப்பிட்டு செல்கிறது. நேற்று அதிகாலை உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் நகரில் மூன்று வீடுகளில் உள்ளே நுழைந்த யானை கூட்டம் பழ மரங்களை சாப்பிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. யானைகள் இரவு நேரங்களில் கிராம பகுதிக்குள் நுழைவதால் பொதுமக்கள் தேவை இன்றி இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.