• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மின் அலுவலர்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் அதிர்ச்சி!

ByK Kaliraj

Nov 10, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் கோட்ட செயற் பொறியாளராளராக பணி செய்து வருபவர் பத்மா. இவர் தனது அலுவலக அறையின் நாற்காலியிலமர்ந்தபடி கையில் வைத்திருக்கும் பணத்தை(500- ரூபாய் நோட்டுக்களை ) எண்ணியபடி கல்லாக்கட்டும் வீடியோக் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகப் பரவியுள்ளது.

ஒரு அரசு அலுவலகத்தின் தனது அறையிலேயே உயரதிகாரி ஒருவர் இவ்வளவு பணத்தை தன்னுடைய கையில் வைத்திருக்கலாமா? அவர் கையில் வைத்துள்ளது லஞ்ச பணமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த வீடியோ மின் வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீடியோ விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.