• Tue. Dec 10th, 2024

மின்சார ரயில் சேவை ரத்து..

Byகாயத்ரி

Mar 25, 2022

சென்னை சென்ட்ரல் டூ அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சென்னை – அரக்கோணம், ஆவடி – பட்டாபிராம் இடையே இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் காரணமாக 4 மின்சார ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக திங்கள் முதல் வெள்ளி வரையில்தான் அலுவலகங்களுக்கு செல்வோர் கூட்டம் மின்சார ரயில்களில் அதிகமாக இருக்கும். இதை கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பராமரிப்பு பணி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் பயணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது.