தமிழகம் முழுவதும் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பொறுப்பிற்கு அறிவிக்கப்பட்டவர்கள் அந்தந்த கட்சி கவுன்சிலர்கள் ஓட்டளித்து தேர்வு செய்து வருகின்றனர்.21 மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள்; 138 நகராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள்; 489 பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கான மறைமுக தேர்தல், இன்று நடக்கிறது.
ஒட்டுமொத்தமாக 1,296 பதவிகள், மறைமுக தேர்தல் வாயிலாக நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 21 மாநகராட்சியில் 20 மாநகரட்சியில் திமுக மேயர் பொறுப்பை பெற்றுள்ளது.காங்கிரசுக்கு ஒரு மேயர், இரு துணை மேயர் பதவிகளும், இ.கம்யூ., மா.கம்யூ., வி.சி.க., மதிமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா ஒரு துணை மேயர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.இன்று காலை தமிழகம் முழுவதும் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடந்தது. பல பகுதிகளில் போட்டி இல்லாமல் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் மற்றும் அதிகாரிகள் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர்.