• Thu. Mar 28th, 2024

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அறவிப்பு…

Byகாயத்ரி

Feb 15, 2022

வருகின்ற 19-ம் தேதி நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.அனைத்து வேட்பாளர்களும் அவரவர் தொகுதி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இதன்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சில தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பிரச்சாரங்கள் அனைத்தையும் 2 நாட்களுக்கு முன்பாக அதாவது வாக்குப்பதிவு முடியும் 48 மணி நேரத்துக்கு முன்பாக முடித்துக்கொள்ள வேண்டும். மேற்படி பிரச்சார பொதுக்கூட்டங்கள் அனைத்தையும் 17.02.2022 வியாழக்கிழமை அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் உறுதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *