
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் இன்று கழக நிர்வாகிகளுடன் சந்தித்தார்.
விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் மற்றும் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் A.தங்கவேல், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் M.V.மாரியப்பன் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள். அப்போது கட்சி சம்பந்தமான உரையாடல்களுடன் நகர்ப்புறத் தேர்தல் பற்றியும் சில ஆலோசனைகளுடன் இச்சந்திப்பு நிகழ்ந்தது. இவர்களுடன் கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
