• Tue. Feb 18th, 2025

மதுரையில் நகல் விஜய்யை வைத்து தேர்தல் பிரச்சாரம்!

Byகுமார்

Feb 16, 2022

மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 88வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நாகேஸ்வரி ஆதரித்து கேரளாவிலிருந்து நகல் விஜய்யை அழைத்து வந்து விஜய் ரசிகர்கள் வார்டு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரும் நகல் விஜய்யை கண்டு வியந்து பார்த்தனர். சிலர் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

பின்பு பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் மாஸ்டர் படம் விஜய் பாணியில் ஓடிவந்து பேருந்தில் ஏறி உள்ளே இருக்கும் பயணிகளுக்கு துண்டு பிரசங்கத்தை வழங்கி மாசாக வாக்குகள் சேகரித்தார்,, பின்பு அங்கு இருந்த தேனீர் கடையில் வாக்கு சேகரிக்கும் போது வடை சுட்டு வாக்குகளையும் சேகரித்தார். மேலும் பிரச்சாரத்தில், நகல் விஜய் வெற்றி பெற்றால் நாளை உங்கள் தொகுதியில் அசல் விஜய் வருவார் விஜய் ரசிகர்கள் உறுதி அளித்தனர்!