• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கை: கோவை காவல்துறை சுறுசுறுப்பு..,

கோவையின் காவல்துறை சார்பில் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்.

பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அதிகரித்தும், தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக விரோத செயல்களைத் தடுக்க கோவை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தியது.

கோவை சுந்தராபுரம் – பொள்ளாச்சி சாலை சங்கம் வீதி சந்திப்பில் அமைந்துள்ள புறக்காவல் நிலையம் முன்பு, கொடி அணிவகுப்பு துவங்கியது. இதை துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் துவக்கி வைத்தார். இந்த கொடி அணிவகுப்பின் மூலம் தேர்தல் காலத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம்.
தங்கள் வாக்குரிமையை பயன்படுத்துவதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை மூலம் செய்யப்பட்டுள்ளது , என்பது விளக்கப்பட்டது.

சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு சட்டவிரோத செயல்களுக்கும் இடமளிக்காமல் காவல்துறை செயல்படும் என வலியுறுத்தப்பட்டது. தேர்தல் காலத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், மதுபான விநியோகம், அச்சுறுத்தல், வாக்கு வாங்குதல் போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும், தேர்தலை அமைதியான மற்றும் சுதந்திரமான சூழலில் நடத்த அனைவரும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

அணிவகுப்பு சுந்தராபுரம் சங்கம் வீதி சந்திப்பில் இருந்து துவங்கி, சாரதா மில் ரோடு வழியாக, போத்தனூர் காவல் நிலையத்தில் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில்
உக்கடம் காவல் உதவி ஆணையாளர் முருகேசன் CRPF துணை தளபதி சோனியா பிரபா
போத்தனூர் மற்றும் சுந்தராபுரம் காவல் நிலையங்களின் சார்பு ஆய்வாளர்கள்
காவல் துறை அதிகாரிகள், போத்தனூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் அசோக் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.