• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவையில் 17 வயது சிறுவன் அதிவேகத்தில் கார் ஓட்டி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்து..,

BySeenu

Jun 20, 2026

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க் 2வது கிராஸ் சாலையில் அதிவேகமாக வந்த வோல்ஸ்வேகன் போலோ கார் ஒன்று அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதி அதற்கு அடுத்தபடியாக நின்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதி விபத்து உள்ளாகியுள்ளது.

இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அந்த காரை நிறுத்த முற்பட்டபோது பொதுமக்களிடமிருந்து தப்பிப்பதற்காக காரை ஓட்டியவர்கள் மீண்டும் காரை எடுத்துக் கொண்டு அதே சாலையில் தப்ப முயலவே விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் சிலர் அந்தக் காரை நிறுத்துவதற்காக சாலையின் நடுவே நின்றுள்ளனர்.

இதனால் அவர்களிடமிருந்து தப்புவதற்காக வந்த வேகத்தில் காரை திருப்ப முற்பட்ட நிலையில் அங்கிருந்த விஜயகுமார் என்பவரது வீட்டின் மீது கார் மோதியுள்ளது.

அதில் வீட்டின் இரும்பு கேட் பலத்த சேதமடைந்து கார் அதில் சிக்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய மூன்று இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட முற்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அந்த மூன்று இளைஞர்களையும் மடக்கி பிடித்த நிலையில் ஒரு சிறுவன் மட்டும் தப்பியுள்ளான்.

சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாய்பாபா காலனி காவல் நிலைய போலீசார் பிடிபட்ட இரண்டு இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்த மூன்று பெரும் 17 வயது நிரம்பிய சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

மேலும் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனது காரை எடுத்துக்கொண்டு அவனது நண்பர்கள் மூன்று பேர் சென்றதும் பேரூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது சிறுவன் காரை ஓட்டியதும் தெரியவந்தது.

பின்னர் விபத்து ஏற்படுத்திய காரை அங்கிருந்து அப்புறப்படுத்திய போலீசார் பிடிபட்ட இருவரையும் பேரையும் கோவை மேற்கு சரக போக்குவரத்து புணாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன் பேரில் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவர்கள் ஓட்டிச் சென்ற கார் அதிவேகமாக சென்று அடுத்தடுத்த வாகனங்களில் மோதி வீட்டிற்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.