• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

இயற்கை உபாதை கழிக்க சென்ற மூதாட்டி மின்சாரம் தாக்கி பலி.!

ByRadhakrishnan Thangaraj

Jun 22, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லம் கொண்டான் கிராமத்தில் அப்பகுதி சேர்ந்த பெண்கள் பயன்படுத்துவதற்காக அரசு சார்பில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தில் மின்சார கசிவு ஏற்பட்டு அப்பொழுது மழை பெய்தால் மின்சாரம் சாக்கடிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் பலமுறை ஊராட்சி செயலரிடம் புகார் அளித்துள்ளனர். இருந்த போதும் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் இன்று கோவிந்தன் கோவில் தெருவை சேர்ந்த சாமிநாதன் மனைவி அழகம்மாள் வயது 72 என்பவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார். அது சமயம் கீழே கிடந்த பாசம் பிடித்த தண்ணீர் வழுக்கி விழுந்ததில் தடுமாறி கதவை பிடித்துள்ளார். இரும்பு கதவில் மின்சாரம் பாய்ந்ததால் கீழே விழுந்து சம்பவ இடத்திலை உயிரிழந்தார் இது குறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும்பொழுது பலமுறை இது போன்ற சம்பவம் நடந்துள்ளது தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக அந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தனர்.