• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவர் மீது ரயில் மோதி பலி..,

BySubeshchandrabose

Mar 22, 2026

தேனி மாவட்டம் குன்னூர் அருகே போடிநாயக்கனூர் நோக்கிச் சென்ற ரயில் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.

மதுரையில் இருந்து இன்று காலை போடிநாயக்கனூர் நோக்கி சென்ற பயணிகள் ரயில் தேனி குன்னூர் ஆற்றுப்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது ரயில் மோதியதில் கை, கால் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த நபரின் உடலை ரயில்வே போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனியில் நாள்தோறும் காலை மற்றும் இரவில் இரண்டு முறை ரயில் சென்று வரும் நிலையில் தண்டவாளங்களை கடக்கும் விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர்கள் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

ரயில்வே போலீஸார்கள் இந்தப் பகுதி உள்ள கிராம பகுதியில் இவர் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்