ஒட்டன்சத்திரம் அருகே பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் முதியவர் பலி. நெஞ்சை பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் பைபாஸ் புறவழிச்சாலையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த நடராஜ் என்கிற 80 வயதான முதியவர் டீக்கடையில் டீ அருந்திவிட்டு சாலையை கடக்க முயன்ற போது, கோவையில் இருந்து மதுரை நோக்கி செல்வதற்காக முனியசாமி என்கிற தினேஷ் என்பவர் ஓட்டி வந்த கார் அதிவேகமாக வந்து, முதியவர் மீது மோதியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டார், மேலும் முதியவருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவரை மீட்டு ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர், இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த விபத்து குறித்து, ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதியவர் தூக்கி வீசப்பட்ட கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரின் நெஞ்சை பத பதைக்க வைக்கிறது.