• Fri. Jun 13th, 2025
[smartslider3 slider="7"]

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை
மேலும் 5 காசுகள் உயர்வு

முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பிற மண்டலங்களில் தொடர்ந்து விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருவதால் இங்கும் மாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு 545 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையே பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ.98 ஆகவும், முட்டை கோழி விலை ரூ.107 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.