• Sat. Apr 27th, 2024

திருத்தப்பட்ட தி கிரேட் இண்டியன் படத்தலைப்பு

‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், பழமைவாதக் கொள்கைகளும் ஆணாதிக்கமும் நிறைந்த கணவரின் குடும்பத்தில் படும் கஷ்டங்கள், தொடர்ந்து அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதைச் சொல்லியிருந்தஇந்தப் படம் 2021 ஜனவரி 15-ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது திரைப்படம் விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது மலையாளத்தில்

வெளியான அப்படத்தை தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் நடிக்க கண்ணன் இயக்கத்தில் ரீமேக் செய்திருக்கிறார்கள் 2022 புத்தாண்டை முன்னிட்டு படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டார்கள்.

தமிழுக்காக படத்தின் பெயரில் எந்த மாற்றமும் செய்யாமல் மலையாளத்தில் இருந்த அந்தபெயர்போஸ்டரில் இடம் பெற்றிருந்தது.ஆனால், ‘The’ என்ற ஆங்கில எழுத்து தமிழில் ‘தீ’ என இடம் பெற்றிருந்ததுஆனால், அது எழுத்துப் பிழையுடன் வெளியான போஸ்டர் என்பது இன்று தெரிய வந்துள்ளது.


படத்தின் இரண்டாவது போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளார்கள். அதில் ‘The’ என்பதற்கான தமிழாக்கம் ‘தி’ என தவறு சரி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *