எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வது உறுதி என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்றும் அதிலிருந்து அவர் தப்ப முடியாது என்றும் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்திப்பில் தெரிவித்துள்ளார். சில மேதாவிகள் துரோகத்தையே சுவாசமாக கொண்டவர்கள் என்றும் அவர்கள் நல்ல விஷயத்துக்கு ஒத்து வர மாட்டார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து டிடிவி தினகரன் பேசியுள்ளார். மேலும் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைவது இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.