• Tue. Dec 10th, 2024

பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஆலோசனை

ByA.Tamilselvan

Aug 23, 2022

மாநில கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்கலை துணைவேந்தர்களுடன் வரும் 30 ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 30-ம் தேதி தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மாநில கல்விக் கொள்கை, உயர்கல்வி மேம்பாடு, தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.