• Fri. Apr 18th, 2025

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

ByA.Tamilselvan

Sep 10, 2022

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி எழுமலையான்கோவிலில் தரிசனம் செய்தார்.
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று கார் மூலம் திருப்பதி சென்றார்.. இதையடுத்து நேற்று மாலை திருப்பதி வராஹசாமி கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் திருமலைக்கு சென்ற அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பத்மாவதி தாயார் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். ஏழுமலையான் கோவிலில் இன்று காலை 6 மணிக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் லட்டு உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.