தமிழ் திரைப்படப் பாடல் ஆசிரியர் கபிலன் மகள் சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். திருமணத்திற்கு பெற்றோர்கள் வற்புறுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது உடல் சாலிகிராமம் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் Being Women Magazine எனும் இதழையும், the label keera எனும் ஆடை வடிவமைப்பகத்தினையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.