

கொல்கத்தாவில் வங்கக் கடலில் அதிகாலை 6.10 மணி அளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க தலைநகர், கொல்கத்தாவில் இருந்து 340 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 91 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
கடந்த ஜனவரி 7-ம் தேதி நேபாளம் மற்றும் இந்தியாவில் சில பகுதிகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 90க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 14-ம் தேதி டெல்லியில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் நேற்று 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

