• Wed. Apr 23rd, 2025

நீலகிரியில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ்

ByG. Anbalagan

Apr 1, 2025

நீலகிரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நீலகிரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் அமலுக்கு வந்துள்ளது.  இதனால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும்  இ-பாஸ் பதிவு செய்த பின்பு  நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 6000 வாகனங்கள்  வார இறுதி  நாட்களில் 8000 வாகனங்கள் நீலகிரிக்குள் செல்ல  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் முதல் நாளான இன்று நீலகிரி  மாவட்டத்தின் நுலை வாயில் பகுதியான  கோத்தகிரி குஞ்சப்பானை சோதனை சாவடியில்  நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆய்வு மேற்கொண்டு வருகின்றார் .

இ-பாஸ் பதிவு செய்து வருபவர்கள் சோதனைக்கு பின்னரே நீலகிரி  மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவதால் சோதனை சாவடிகளில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால்  வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது .

மேலும் நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் மருத்துவ மற்றும் அவசர வாகனங்களை இ பாஸ் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.