மதுரையில் தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மதுரை மாவட்டத்திற்கு இன்று கன மழை காண ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று இரவில் இருந்து பரவலாக மழை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது, சாரல் மழை முதல் மிதமான மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருகிறது.
குறிப்பாக பழங்காநத்தம் வில்லாபுரம் தத்தனேரி ஜெயந்திபுரம் சுப்பிரமணியபுரம் மாடக்குளம். பெரியார் பேருந்துநிலையம் சிம்மக்கல், கோரிப்பாளையம், செல்லூர், ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றுயுள்ள பகுதிகள், காளவாசல் மாட்டு தாவணி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மதுரை மாநகர் மற்றும் வைகை வடகரை பாலம் எல்லிஸ் நகர் 70 அடி சாலை ஆரப்பாளையம் வழியே செல்லும் பாலம் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதனால் பணிக்கு செல்பவர்கள் அன்றாட கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் கூலி தொழிலாளிகள் மிகவும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.